Saturday, December 1, 2007

இணையத்தில் தமிழ்ப் புத்தகங்கள்

ஆங்கிலத்தில் வெளிவரும் புத்தம்புதிய புத்தகங்களும், இதழ்களும் உடனுக்குடன் இணையத்தில் கிடைக்கின்றன. சைன்ஸ், பிசி வேர்ல்ட், பிசி மகசின், த எக்கனமிஸ்ட், பிசினஸ்வீக் போன்ற இதழ்கள் கடைக்கு வரமுன்னரேயே இணையத்தில் வெளியாகின்றன.

கணினித் துறை புத்தகங்களுக்கும் குறைவேயில்லை. கணினி துறையின் சகல புத்தகங்களும் இணையத்தில் உடனுக்குடன் படிக்கக் கிடைக்கின்றன.

அதுமட்டுமா? சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் போன்ற பிரபல எழுத்தாளர் புத்தகங்களும் நோம் சாம்ஸ்க்கி போன்ற அறிஞர்களின் எழுத்துக்களும் சுயமுன்னேற்ற நூல்களும் சமயப் புத்தகங்களும் நாவல்களும் பெருமளவில் கிடைக்கின்றன். செக்ஸ் புத்தகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

ஆனால் தமிழ்ப் புத்தகங்களின் நிலையோ பரிதாப நிலையில் உள்ளது. புதிய விதயங்களைக் கொண்டு வெளிவரும் ஒரு புத்தகம்தானும் இணையத்துக்கு வருவதில்லை. வார, மாத இதழ்கள் கூட பி-டி-எப் பைல்களாக வெளியிடப் படுவதே இல்லை.

ஒரேயடியாக ஒன்றுமேயில்லை என்றும் கூறிவிட முடியாது. இலங்கையை சேர்ந்தவர்கள் நூலகம் என்னும் திட்டத்தின் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். மின்வருடி வெளியிடுவதில் தமிழில் இவர்களையே முன்னோடிகள் எனலாம். ஆனால் நூலகத் திட்டம் இலங்கைப் புத்தகங்களை மட்டுமே வெளியிடுகிறது. இந்தியப் புத்தகங்களை வெளியிடுவதில்லை என்று அறிவித்துள்ளனர். அத்துடன் இவர்கள் வெளியிடும் பெருமளவு புத்தகங்கள் இலக்கியப் புத்தகங்களே ஆகும்.

வேறு தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதோ மிக மிக அரிதாகவே உள்ளது. வாசகர்கள் அதிகம் விரும்பும், வாசிக்கும் புத்தகங்கள் இணையத்துக்கு வருவதே இல்லை எனலாம்.

இந்த பெரிய இடைவெளியை சிறிதளவேனும் நிரப்ப நாம் முன்வந்துள்ளோம். இது தொடர்பான பரபரப்பான அறிவித்தல்களை விரைவில் எதிர்பாருங்கள்.

0 comments: