Saturday, December 1, 2007

நீங்களும் வாருங்கள்

புத்தகங்களை இணையத்தில் கிடைக்கச் செய்யும் முயற்சிக்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

இந்த முயற்சியில் யாரும் இணைந்து பங்களிக்கலாம். ஆனால் யாரும் தம்மைப் பற்றிய விபரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தக் கூடாது. இது முழுக்க முழுக்க சமூகத் தொண்டாகும். சுய விளம்பரம் என்ற இலாபத்தைக்கூட எதிர்பார்க்காத தொண்டாகும்.

மேலும் இந்திய புத்தகங்கள் மட்டுமே வெளியிடலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் எம்மிடம் இல்லை. இந்திய, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் மற்றும் எத்தேசத்துப் புத்தகம் என்றாலும் அதனை எமது வலைப்பதிவினூடாக அறிமுகம் செய்யலாம். இலக்கியம் அல்லாத புத்தகங்களுக்கும் தகுந்த கவனம் செலுத்துவோம்.

மேலும் குறிப்பிட்ட தளமொன்றில் சேர்த்துவைக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகளும் எம்மிடம் இல்லை. இணையத்தில் எங்கு வெளியிட்டாலும் அதனை அறிமுகம் செய்ய நாம் தயாராக உள்ளோம்.

ஆக்கபூர்வமான முயற்சியாக அமைய வேண்டும் என்பது ஒன்றுதான் எமது நிலைப்பாடு ஆகும். புத்தகங்களுடன் சேர்த்து விளம்பரங்களோ, நன்கொடை வேண்டுகோள்களோ வெளியிடப்பட மாட்டாது.

தமிழை பரப்ப வேண்டும் என்ற ஒரே உண்மையான எண்ணம் கொண்டவர்கள் மட்டும் வாருங்கள். வாருங்கள். வாருங்கள்.

2 comments:

said...

புதிய புத்தகங்களை பற்றி மட்டும்தான் எழுத வேண்டுமா?

said...

Hi

Its a nice effort.
We could start publish books by Sujatha, Balakumaran, Vaasanthi,Gnaani, S.Ramakrishnan, Iraianbu, Vannanilavan, Vannadasan, Veerapandiyan