தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாகப் புத்தகங்களை முழுமையாக இணையத்தில் கிடைக்கச் செய்யும் முயற்சியை நாம் தொடங்கியுள்ளோம்.
இது எதுவித இலாபக் குறிக்கோள்களும் அற்ற சமூகத் தொண்டாகும். நாம் வெளியிடப்போகும் புத்தங்களில் எதுவித விளம்பரங்களும் இணைக்கப்படாது. புத்தகங்களை வாசிக்க எந்தவிதக் கட்டணங்களும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் எமது இந்த முயற்சிக்கு எதுவித நன்கொடைகளும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் வெளியிடுவதே எமது நோக்கம் ஆகும். போதிய வரவேற்புக் கிடைத்தால் எமது முயற்சிகள் தொடரும்.
புத்தகங்களை இணையத்தில் வெளியீடு செய்வதில் ஸ்கேன் செய்து வெளியிடும் முறையையே நாம் பின்பற்ற உள்ளோம். இதற்கான செயல்முறையை அறியத்தந்த அன்பருக்கு நன்றிகள்.
அன்பான வாசகப் பெருமக்களே, தமிழ் வலைப்பதிவுலகில் முதல் முறையாக புத்தகங்களை மின்வடிவில் வெளியிடும் முதல் வலைப்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றோம். .
நல்ல காலம் பிறக்குது !!!
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
அருமயான முயற்சி. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
-ஜெயபிரதீப்
அருமையான பணி .. வாழ்த்துக்கள் :-) ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன் .. காப்பிரைட் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் .. ப்ராஜெக்ட் மதுரை வலைத்தளத்திலும் தமிழ் படைப்புகள் மின் கோப்புகளாக உள்ளனவே ..
நல்ல பணி,
முயற்சி வெற்றி பெற வாழத்துக்கள்.
சிறப்பான முயற்சி வாழ்த்துகள்..
நல்ல முயற்சி...
ஆனால் பதிவில் சில விவரங்கள் தெளிவுபடுத்தப் படவில்லை...
நாட்டுடமை ஆக்கப் பட்ட நூல்களை வெளியிடுவதாக இருந்தால் அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே மதுரை திட்டம், சென்னை நூலகம் போன்றவற்றில் வெளியிடப் பட்டுள்ளது... ஒரே வேலையை இருமுறை செய்யத் தேவை இல்லை...
பிற தற்கால நூல்களை வெளியிட இருக்கிறீர்கள் என்றால் அதற்கு பதிப்பாளர், ஆசிரியரின் எழுத்து மூலமான அனுமதி பெற்றே செய்ய வேண்டும்..இல்லை எனில் அது சட்டப் படி குற்றம்...
புதிதாக புத்தகங்கள் வெளியிட இருக்கிறீர்கள் என்று எண்ண இயலவில்லை...காரணம் புத்தகங்களை ஸ்கேன் எடுத்து வெளியிடுவதாக சொல்லி இருக்கிறீர்கள்...
எனவே என்ன புத்தகங்களை வெளியிட இருக்கிறீர்கள் என்பதை சற்று தெளிவுபடுத்துங்கள்.
வணக்கம்
எனது பின்னூட்டம் ஒன்று வெளிவராமல் இருக்கிறதே...ஏன் என்று அறிந்து கொள்ளலாமா?
அனைவருக்கும் நன்றி. இரு புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம். அது தொடர்பாகவும் கருத்துகளை எதிர்பார்கிறோம்.
Post a Comment